தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் வகுப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எதையெல்லாம் மாணவர்கள் பின்பற்றலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் விளையாடவும்.
நீர்நிலைகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும்.
வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது.
செல்போனில் மூழ்கி கிடக்காமல் அவ்வப்போது படிக்கவும்.
திறன்களை வளர்த்துக்கொள்ள இசை ஓவியம் போன்ற வற்றை கற்கவும்.
தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று ஜாலியாக இருக்கவும்
பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் காணும் விடுமுறையாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
Post a Comment