தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி விருப்பப்பட்டவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இந்த நிலையில் மாவட்ட மாறுதலில் சென்ற ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் இருந்து எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று வந்துள்ளார் எனவும் அந்த மாவட்டத்திற்குரிய பெயர், முகவரி என அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதிவு செய்து அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் ஏதும் அனுப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய விவரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசுக்கு 25-ஆம் தேதிக்குள்(நாளை) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் யார் என்ற விவரங்களை மே.25ம் தேதிக்குள்(நாளை) அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post a Comment