மறக்காம செய்துடுங்க... இன்று தான் கடைசி தேதி. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் இன்று மாலைக்குள் முடிக்க வேண்டியது என்ன?
தமிழக அரசு, 'இல்லம் தேடி கல்வி திட்டம் 2022' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஆங்கில வழி கல்வியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையில் பயிலும் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இத்திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச தரவுகளின் அடிப்படையில், அனைத்து பாடங்களுக்குமான அடிப்படை ஆய்வு 26 கைப்பேசி செயலிகளில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மையத்திற்கு வரும் அனைத்து மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அடிப்படை ஆய்வினை தன்னார்வலர்கள் மேற்கொண்டு இன்று மே6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு முறைகளையும், இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அனைத்து தன்னார்வலர்களும், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், மாவட்ட கலெக்டர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டாட்சியர் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment