தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு உள்ளது.

இதனை மையமாகக் கொண்டுதான் " நான் முதல்வன்" திட்டமெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமைகள் இருக்கும். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டது என மாணவர்கள் வெயிலில் சுற்றித் திரியக் கூடாது, நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது. மாணவர்கள் இந்த கோடை விடுமுறையில் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள கணினி வகுப்பு, நீச்சல் மற்றும் ஆர்ட் உள்ளிட்டவற்றுக்கு சென்று விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இருந்தாலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இனி வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக குறையும். அதன் மூலம் நேரடி வகுப்புகள் சிறப்பாக நடைபெறும். எனவே வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் அனைவரும் உணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வரவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மூலம் இனி ஆன்லைன் வகுப்புகள் இருக்காது என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post