அரசுத் துறைகளில் குரூப் 2, குரூப் 2-ஏ பணிகளில் 5,529பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமமான டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கியுள்ள பிரத்தியேக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் அவர்களின் விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால் தேரின் மொத்த மதிப்பெண்ணில் இருந்தே இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

இந்நிலையில் தேர்வறையில் விதிகளை மீறி நடந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் தேர்வு அறைக்கு வெளியே எடுத்து செல்வதும், பார்கோடு பகுதியை கிழிப்பதும் முறைகேடு புகார்கள் ஆக கருதப்பட்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.மேலும் தேர்வறையில் கண்காணிப்பாளர்களிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

Post a Comment

أحدث أقدم