தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்ததையடுத்து குறைந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் - 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ், இனி வரும் கல்வி ஆண்டில் கொரோனா கால அட்டவணை இல்லாமல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை வார விடுமுறை ஆகியவற்றோடு 148 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏழு நாட்கள் பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு 210 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து 148 நாட்கள் விடுமுறை நாட்களாகும். இதர பணி நாட்கள் ஏழு நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم