தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஒருநாள் காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினர்.
அதனால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்த மக்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால் தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்வதற்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வுகளை அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி இடமாறுதல் பதவி உயர்வு போன்றவற்றையும் வழங்கியது. இந்நிலையில் தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் எண்ணும் எழுத்தும் பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை கருத்தாளர்கள் ஆக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகின்ற 23 முதல் இருபத்தி எட்டாம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சியை முடித்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளது .
Post a Comment