1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது, தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
1 முதல் 9 ஆம் வகுப்பு (Govt school) வரை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது எனவும், தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை (school summer holidays 2022) அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்' என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுமார் 9 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தவிர, மதுரை, நெல்லை, ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரி பதிவாகியுள்ளது. இதற்கிடையில், அக்னி நட்சத்திரம் என கூறப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி உள்ளது. இது 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24 ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் எனவும் வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
இப்படி அளவுக்கு அதிகமான வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வழக்கமான வகுப்புகளுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق