குழந்தைகளின் ஆங்கில வாசிப்பை குதூகல அனுபவமாக்க Read Along மூலம் கூகுள் GoogleIndia நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை இணைகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணையுடன் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச மற்றும் புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்துவதற்கு கூகுள் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைஎடுத்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Google Read Along செயலியை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக Google India & School Education இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறிக் கல்வியை கற்பிக்கவும் 'இளந்தளிர் இலக்கியத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளான இளங்கோ, ஞா.கலையரசி, வெற்றிச்செழியன், உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதாஜோ, பொற்கொடி, உதயசங்கர், சாலை செல்வம் மற்றும் ஆதி வள்ளியப்பன் ஆகிய 10 எழுத்தாளர்களின் அழகிய ஓவியங்களுடன் கூடிய 23 சிறார் படைப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
إرسال تعليق