SSC பணியாளர் தேர்வு ஆணையம் (Staff selection commission) கெசட்டட் (non-gazetted ) அல்லாத பல்வேறு பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஒரு நபரே விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத் தேதி மே 23 அன்று தொடங்கியது. மற்றும் கடைசி தேதி ஜூன் 13 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெறும். ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெற இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்ட ஆணையம், இன்னும் தேர்வு நடைபெறும் தேதியை அறிவிக்கவில்லை. பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம் ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அறிவிக்கப்பட்டிருக்கும் காலியிடங்கள் :


இளநிலை உதவியாளர்/தேர்தல் உதவியாளர்

இளநிலை ஸ்டெனோகிராபர்

புள்ளியியல் உதவியாளர் / இளநிலை புள்ளியியல் உதவியாளர்

கிரேட் II டிரைவர்

ஆர்டர்லி

சஃபாய்வாவாலா

விண்ணப்பதாரர்களின் அடிப்படைத் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:

SSC அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருக்கலாம்.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது, 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர், ஷெட்யூல்டு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

டிரைவர், ஆர்டர்லி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்ச்சியாகும்.

அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கு, குறைந்த பட்ச கல்வித்தகுதி, இளங்கலை பட்டம்.

முக்கியத் தேதிகள்:


SSC பணியிடங்களுக்கான அறிவிப்புத் தேதி: 23 மே 2022

ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி: 23 மே 2022 முதல் 13 ஜூன் 2022 (இரவு 11 மணி வரை)

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி: 15 ஜூன் 2022 (இரவு 11 மணி வரை)

விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்காக செலான் பெறும் கடைசி தேதி: 16 ஜூன் 2022 (இரவு 11 மணி வரை)

செலான் வழியாக வங்கியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி: 18 ஜூன் 2022

விண்ணப்பித்த படிவங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கான தேதிகள்: 27 ஜூன் 2022 முதல் 29 ஜூன் 2022 வரை (இரவு 11 மணி வரை)

ஆன்லைன் தேர்வு தேதி - ஆகஸ்டு மாதம், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100, ஆன்லைன் பேமெண்ட் மோடு வழியாகச் செலுத்தலாம். பெண் விண்ணப்பதாரர்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இடஒதுக்கீட்டிற்குத் தகுதியான ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم