எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான 116 காலிப்பணியிடங்களையும், குரூப் 2ஏ ஆகியவற்றில் 5,413 பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்றது. முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது.
குரூப் 2 தேர்வு வரும் 21-ம் தேதி தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 117 வட்டங்களில், 4012 தேர்வு மையங்களில் காலையில் நடைபெறுகிறது. இதற்காக 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதை இணையத்தில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி…?முதலில், விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டலைப் பார்வையிடவும்,
முகப்புப் பக்கத்தில் Recruitment Notification என்பதை பார்க்கவும்.
இப்போது, TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
குரூப் 2 அனுமதி அட்டைக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பெயர் மற்றும் விண்ணப்ப எண் போன்ற அத்தியாவசிய உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்.
சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும், திரையில் குழு 2 ஹால் டிக்கெட் காண்பிக்கப்படும்.
நுழைவு சீட்டில் சரியான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பார்க்கவும்.
பின்னர் TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கான பிரிண்ட் அவுட் எடுக்கவும்
إرسال تعليق