தமிழக அரசின் குரூப் 4 தேர்வானது, கொரோனா தொற்று பரவலால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பின், தற்போது நடப்பாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மேலும் இத்தேர்வில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் , வரித் தண்டலர் , நில அளவர் , வரைவாளர் உள்ளிட்ட 7 வகையான பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களில் மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஆனால் மொத்தம் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே கடுமையான போட்டி இருக்கும் என்று அரசு தரப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில், இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் தேர்வர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதேபோல தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப் பெறுகின்றனர். இதையடுத்து , குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் சென்னை, கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மே 20ம் தேதி முதல், நேரடி மற்றும் ஆன்லைன் மூலம், பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. எனேவ இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் https://t.me/+huD-ieZ540EzOc9 என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
إرسال تعليق