தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, TRB உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அனைத்து தேர்வுகளும் தமிழ் மொழிகளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும் என இருந்த நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment