சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்லனர்.
தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இதில் மாணவர்கள் 84.86%; மாணவிகள் 94.99% தேர்ச்சி இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தனர்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இணைய தளங்கள்:
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
இந்த இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடுசெய்து மதிப்பெண்களைப் பார்க்க முடியும்.
அதேநேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது பள்ளியில் தாங்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும்
Post a Comment