சென்னை: தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்களை (எஸ்.ஐ) தேர்வு செய்ய (ஆண், பெண், திருநங்கை) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இணையதளம் மூலமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் முதல் கட்டமாக, சென்னையில் 11 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இன்று காலை எழுத்து தேர்வுநடைபெறுகிறது. பிற்பகலில் முதல்முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்காக சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 43 ஆயிரம்பேர் பெண்கள். 43 திருநங்கைகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனியாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அகர்வால் செய்துள்ளார்.
إرسال تعليق