தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பட்டயப்படிப்பில் சேர்வதற்கு ஜூலை 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பில் சேர்வதற்கு ஜூலை 4-ம் தேதி காலை 10 முதல் scert.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது என எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை 12-ம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயாமாகப் பயின்றிருக்க வேண்டும். 31.7.2022 அன்று வரை அதிகபட்ச 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.
Post a Comment