இதுகுறித்து தமிழக அரசு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது, அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால், அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 54 வயதிற்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் வயதுக்கு உள்பட்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள நபர்கள்.
அதேபோல் ஓய்வு பெறும் வயது 56 என்றால், அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். மேலும், 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். அதேபோல் 59 வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால், அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகளுக்கு மாணவர் சேர்கை உடனே தொடங்க வேண்டும்.! தமிழக அரசுக்கு தொடரும் கோரிக்கை
The post அடி தூள்… 60 வயதுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ்…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!
إرسال تعليق