விழுப்புரம் : அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம் என கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றம் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.tngasa.in மற்றும் www.tngasa.org இணைய தள முகவரியில் பதிவு செய்ய தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.இணையதள வாயிலான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 7ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பாட பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.கல்லுாரியில், பி.ஏ., மொழிப் பாடங்கள் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.மொழிப்பாடங்களைத் தவிர பிற வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அனைத்து பாடங்களும் ஷிப்ட் அடிப்படையில் இரு நேரங்களில் இயங்குகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم