சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான விதிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. காலையில் எழுத்துத் தேர்வும் , பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . தேர்வு எழுத வரும்போது பால் பாயின்ட் பென் , ஹால் டிக்கெட் , ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
அதே சமயம் செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Post a Comment