அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன் விதிமுறைகளை அண்மையில் மத்திய அரசு திருத்தியது. இதில், காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன் விதிமுறைகள் மாற்றப்பட்டன. புதிய விதிகள் என்ன சொல்கின்றன? மத்திய அரசு ஊழியர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்களை பார்க்கலாம்.
யாருக்கு விதிமுறை மாற்றம்?
தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மூ காஷ்மீரில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் குடும்ப பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் திருத்தியுள்ளது.
புதிய விதிமுறை
புதிய விதிமுறைகளின்படி, தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது காணாமல் போனால் அவர்கள் குடும்பத்துக்கு குடும்ப பென்சன் வழங்கப்பட வேண்டும்.
இதர பலன்கள்
புதிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கால பணிக்கொடை (Gratuity), ஈட்டிய விடுப்பு (Encashed Leave) உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
அரசு ஊழியர் திரும்பி வந்தால்
காணாமல் போன அரசு ஊழியர் திரும்பி வந்துவிட்டால் இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரின் சம்பளத் தொகையில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும்.
பழைய விதிமுறை
பழைய விதிமுறைகளின்படி, மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது. அவர் தொலைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு அல்லது அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்யப்பட்ட பிறகே குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.



Post a Comment

أحدث أقدم