கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் 18 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், சில மாதங்களுக்கு முன் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப்படிப்பு | பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் பலன்பெற தகுதியான மாணவிகள் www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஏறகனவே இருந்த காலஅவகாசத்தை கடந்த 10 தேதி வரை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர். இதற்கான கடைசி தேதி கடந்த 10 ஆம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment