தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் கல்லூரிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாக, இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மாணவிகள் பதிவு செய்யலாம்.
கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இன்றே கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்யாத மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தினை, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு, அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் இன்று மாலைக்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.
إرسال تعليق