நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் அடுத்து வரும் ஜூலை மாதத்தில் 17 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு பட்டியலையும் இப்போது பார்க்கலாம்.
வங்கி விடுமுறை
அடுத்ததாக வரவிருக்கும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டரின்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் வங்கிகள் மூடப்படும். இதில் அரசிதழ் விடுமுறைகள், பொது மற்றும் தனியார் என அனைத்து வங்கிகளாலும் கடைபிடிக்கப்படும் கூடுதலாக, வங்கிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அனைத்து சட்டப்பூர்வ விடுமுறை நாட்களிலும் மூடப்படும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இது தவிர ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் பல பிராந்திய விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இதனால், உள்ளூர் காலண்டரின் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் குறிப்பிட்ட சில நாட்களில் மூடப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு தங்களது வங்கி தொடர்பான சேவைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், விடுமுறை நாட்களிலும் இணைய வங்கி சேவைகள் தடையில்லாமல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை பட்டியல்:
ஜூலை 1- ரத யாத்திரை (ஒடிசா)
ஜூலை 5- குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்)
ஜூலை 6- MHIP நாள் (மிசோரம்)
ஜூலை 7- கர்ச்சி பூஜை (திரிபுரா)
ஜூலை 9- இத்-உல்-அதா (பக்ரித்)/ இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை 11- ஈதுல் அஸ்ஹா
ஜூலை 13- தியாகிகள் தினம் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
ஜூலை 13- பானு ஜெயந்தி (சிக்கிம்)
ஜூலை 14- பென் டியன்க்லாம் (மேகாலயா)
ஜூலை 16- ஹரேலா (உத்தரகாண்ட்)
ஜூலை 23- நான்காவது சனிக்கிழமை
ஜூலை 26- கேர் பூஜை (திரிபுரா)
Post a Comment