தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும். மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்புதேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்தனர். இதில் 9,26583 பேர் ஆண்கள், 12,58,616 பேர் பெண்கள், 129 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 24ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தனது இணையதளத்தில்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) நேற்று காலை வெளியிட்டது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுதேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 21.85 லட்சம் பேர் எழுதும் தேர்தல் திருவிழாவுக்கு தேர்வர்கள் ெரடியாகி வருகின்றனர்.
إرسال تعليق