Professor மற்றும் Additional & Associate Professor பணியிடங்களை நிரப்ப மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.
இந்த அரசு பணிக்கு என 94 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை AIIMS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D முடித்திருக்க வேண்டும். Professor மற்றும் Additional Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். Associate மற்றும் Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,500/-, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,200/- மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வி தகுதியும், வயது வரம்பும் உடைய விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பேராசிரியர் ரூ. 1,68,900 - 2,20,400/-, கூடுதல் பேராசிரியர் ரூ. 1,48,200 - 2,11,400/-, இணைப் பேராசிரியர் ரூ. 1,38,300 - 2,09,200/- மற்றும் உதவிப் பேராசிரியர் ரூ. 1,01,500 - 1,67,400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18.07.2022 திங்கள் கிழமை மாலை 04.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
إرسال تعليق