தமிழகத்தில் 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து கலை, அறிவியியல் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பல கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஅதில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு குறித்து கல்லூரிகள் இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு தரப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.அத்துடன் அக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மட்டும் 476 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழக உறுப்பினர்கள் குழு ஆய்வு செய்து முடித்துள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
إرسال تعليق