இன்று முதல் +2 மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், நாளை ஜூலை 15ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்வியாண்டு 2021 -22ம் ப்ளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று ஜூலை 14ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ப்ளஸ்2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று ஜூலை14ம் தேதி வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யும் முறை:அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட வேண்டும். இதனை பதிவு செய்த பிறகு விடைத்தாள் நகல் திரையில் தோன்றும்.இந்த விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்னர், அவர்களுடைய விடைத்தாள்களில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள், மதிப்பெண்களில் வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின் மறுகூட்டலுக்கு நாளை ஜூலை 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை ஜூலை 19ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق