திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் ஆராயப்பட்டு அவற்றிற்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியருக்கு தேவையான இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட வேண்டி உள்ளது. இதுவரை சுமார் 5.50 லட்சம் பேர் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்தனர். அவற்றில் சுமார் 4.50 லட்சம் சான்றுகள் வழங்கப்பட்டு விட்டாலும் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் மீதமுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment