தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் கொரோனா பரவாலின் காரணமாக மூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் போதிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள் பலருக்கு லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு சில பள்ளிகளின் மாணவர்கள் முகக்கவசம் இன்றி வகுப்பறையில் அமர்ந்தாலும், பள்ளி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. 1 முதல் 8ம் வகுப்பு வரை 6 முதல் 7 மணி நேரம் வரை முகக்கவசத்துடன் வகுப்பறையில் அமர்வது பாதுகாப்பானதா? என்று பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
மேலும் தற்போதைய சூழலில் ப்ரைமரி பள்ளி குழந்தைகள் நேரடி வகுப்புகளுக்கு வந்தே ஆக வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பள்ளிகளை மூடுவதோ, இல்லை ஊரடங்கை அமல்படுத்துவதிலோ தற்போது வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். மேலும் தொற்றுப் பரவல் குறித்து அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அதில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொற்று பரவல் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும், மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட்டு பின்னரே குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் தொற்று கட்டுப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் கடுமையாகலாம் எனவும் தொடக்கப்பள்ளிகள் மூடுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
إرسال تعليق