தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமோ என்று அச்சம் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் கொரோனா அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் காட்டுவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆன்லைன் வகுப்புகள் நடத்த கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment