ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. தாள் I மற்றும் தாள் 2-க்கான தகுதித்தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வரையிலான கால அவகாசத்தில் தாள் I-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 பேரும் ஆக மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தகுதித் தேர்வு தாள் I-க்கு வரும் ஆகஸ்ட் 25 முதல் 31-ம் வரை நடத்தப் படும் என்று தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் தேர்வுக்கான அட்டவணை, அனுமதிச்சீட்டு போன்றவை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றம் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாள் 2-க்கான தேர்வு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.
إرسال تعليق