தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதனையடுத்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட து. தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது வேலை வாய்ப்புபதிவுகள் பள்ளிகளில் இனி பதிவு செய்யப்பட மாட்டாது என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
முன்னதாக பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வாங்கும்போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைனில்(www.tnvelaivaippu.gov.in) பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
إرسال تعليق