அடுத்த கல்வியாண்டில் பயில உள்ள மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் தயாரிக்க ஏதுவாக அந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிகல்வி துறை உத்தரவு. வேகமாக புத்தகம் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் உடனடியாக பட்டியல் தயாரிக்க உத்தரவு. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது வழக்கம். அப்படி 2023-2024 ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதற்கு ஏதுவாக மாணவர்கள் சார்ந்த விவரங்களை உடனடியாக சேகரிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கும், எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பருவத்திற்கும் பயில உள்ள மாணவர்களுடைய எண்ணிக்கை சார்ந்த தகவல்களை தனித்தனியாக உடனடியாக சேகரித்து 22.11.2022 க்குள் Dseesection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post