தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கலைக்கட்ட போகும் கலை இலக்கிய நிகழ்வுகள் நடைப்பெற உள்ளன. குறிப்பாக மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக பல்வேறு கலை இலக்கிய போட்டிகளும் நடை பெற உள்ளன.தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா என்ற பெயரில் கலை இலக்கிய செயல்பாடுகள் நடக்கவுள்ளன. மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியும் இது.தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த கலைத் திருவிழாவின் நோக்கமாகும்.

மேலும், மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்த கலைத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இதில் , ஓவியம், கவிதை, கட்டுரை, மிமிக்கிரி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகள் பங்கேற்கும் கலைத்திருவிழா நிகழ்வுகள் பள்ளி அளவிலிருந்து துவங்கி மாநில அளவு வரை 23/11/2022 முதல் 9/1/2023 வரை நடைபெற உள்ளது.

இதில் , 23/11/2022 முதல் 28/11/2022 வரை பள்ளி அளவிலும், 29 முதல் டிசம்பர் 5 வரை வட்டார அளவிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் 6 முதல் 10 வரை நடக்கும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் ஜனவரி மாதம் 3 முதல் 9 வரை நடைப்பெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள். 

இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை பள்ளிக்கல்வி துறையின் சார்பில் வெளிநாட்டு சுற்றுலாக்கு அழைத்து செல்ல உள்ளனர். எனவே , அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post